ஹைத்தி தலைநகரில் மூன்றாவாது நாளாக வன்முறை மூவர் உயிரிழப்பு

Home

shadow

       பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஹைத்தி தலைநகரில் மூன்றாவாது நாளாக நீடித்த வன்முறைப் போராட்டத்தில், மூவர் உயிரிழந்தனர்.

      கரீபியின் தீவு நாடான ஹைத்தியில் அரசு அறிவித்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து விலை உயர்வை ஒத்திவைப்பதாக அரசு அறிவித்தபோதிலும் கண்டனப் போராட்டங்கள் தொடர்ந்தன. கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் போர்ட் ஏ பிரின்ஸில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் வன்முறைகள் நிகழ்ந்தன. இதில் ஏராளமான கார்கள் தீக்கிரையாக்கிய கலவரக்காரர்கள், பல கடைகளையும் சூறையாடினர். அதிபர் ஜோவெனில் மோய்ஸ் பதவி விலகும்வரை தங்களது போராட்டம் நீடிக்கும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். போராட்டத்தின் எதிரொலியாக ஏர் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விமான சேவை நேற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்றும் நாளையும் கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :