2030-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க ஐ.நா பருவநிலை பேரவையில் தீர்மானம்

Home

shadow

2030-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க ஐ.நா பருவநிலை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்கின்றன. இதனை தடுக்க சர்வதேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், 2030-ஆம் ஆண்டிற்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை கணிசமான அளவு குறைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நைரோபியில் நடைபெற்ற ஐ.நாவின் பருவநிலை பேரவை கூட்டத்தில் இந்த தீர்மானத்திற்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முன்னதாக 2025-ஆம் ஆண்டிற்குள், உலகம் முழுவதும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க கோரும் தீர்மானத்திற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் கைவிடப்பட்டது.

 

இது தொடர்பான செய்திகள் :