அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

Home

shadow

          குடியரசுத்தலைவர், பிரதமர் ஆகியோர் பயணிக்கும் விமானங்களில் பொருத்துவதற்காக,  ஆயிரத்து 362 கோடி மதிப்பிலான, அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய பாதுகாப்பு உபகரணங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைக்கு உட்பட்டு இந்த விற்பனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும், இதனால், இருநாடுகளுக்கு இடையிலான உத்திசார் நட்புறவு மேலும் வலுப்படும் என்றும், அமெரிக்கப் பாதுகாப்புத்துறையின் தலைமையகமான பெண்டகன்' தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில், அந்நாட்டு ராணுவப் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,  லெயர்கேம் என்று அழைக்கப்படும், அகச்சிவப்பு கதிர் அடிப்படையில் இயங்கும்  தடுப்பு நடவடிக்கை இயந்திரம் மற்றும் எஸ்பிஎஸ் என்று அழைக்கப்படும், தானியங்கிப் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றை ஆயிரத்து 362 கோடி மதிப்பீட்டில் இந்தியாவுக்கு விற்பனை செய்ய அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :