அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை

Home

shadow

அமெரிக்க துணை பிரதமர் மைக் பென்ஸ் நேற்று ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலிபான்கள் மற்றும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுக்கு பாதுகாப்பான முகாமாக பாகிஸ்தான் விளங்கி வருவதாக கூறினார். அது தற்போது முடிவுக்கு வந்து விட்டதாகவும்,  அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது குறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர் தெஹ்மினா ஜனுஜா,  அமெரிக்க துணை அதிபரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தார். பாகிஸ்தான், பயங்கரவாதிகளின் சரணாலயம் அல்ல என்று கூறிய அவர், அரசின் நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு இடம் பெயர்ந்து விட்டதாக குறிப்பிட்டார்.  மைக் பென்சின் பேட்டி குறித்த கவலையை அமெரிக்காவிற்கு தெரிவித்துள்ளதாகவும், நட்பு நாடுகள் ஒன்றுக்கொன்று குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெஹ்மினா ஜனுஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :