அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கவனோ நியமனம்

Home

shadow

     அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கவனோவை நியமனம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடி ஓய்வு பெற உள்ளதை தொடர்ந்து, அவரது இடத்திற்கு  கவனோவை நியமனம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்தோணி கென்னடியிடம் குமாஸ்தாவாக தனது பணியை தொடங்கிய கவனோ, இன்று உச்ச நீதிமன்றத்தில் அவரது இடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பழமைவாதியான இவர், அமெரிக்க நீதித்துறையில் அதிபர் டிரம்ப்பின் துருப்புச் சீட்டாக கருதப்படுகிறார். அமெரிக்க அதிபரின் ஆலோசகராகவும் இவர் பணியாற்றியுள்ளார். தற்போது வாஷிங்டன் மாகாண நீதிபதியாக கவனோ பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டிரம்ப், கவனோவை விட வேறு யாரும் இந்தப் பதவிக்கு தகுதியானவராக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :