அமெரிக்க - வடகொரிய இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: கொரிய கூட்டுறவு அலுவலகத்தை விட்டு வெளியேறுகிறது வடகொரியா

Home

shadow

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் எதிரொலியாக, கொரிய கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரியா வெளியேற உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் இடையேயான முதல் கட்ட சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற்றதை தொடர்ந்து சர்வதேச நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் வடகொரியா ஆர்வம் காட்டியது. குறிப்பாக அண்டை நாடான தென்கொரியாவுடனான உறவை புதுப்பிப்பதில் முனைப்பு காட்டி வந்தது. அந்த வகையில், தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது நாட்டு அணியை  வடகொரியா அனுப்பியது. மேலும்  தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தையும்  நடத்தியது. இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேச ஹாட்லைன் தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டது. தென்கொரியாவில் உள்ள கேய்சோங் நகரில் இருநாடுகளை சேர்ந்த உயரதிகாரிகள் சந்தித்து ஆலோசனை செய்ய கூட்டுறவு அலுவலகம் ஒன்றும் கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டதுஇந்நிஅலியில் தற்போது, கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வெளியேறுமாறு தங்கள் நாட்டு அதிகாரிகளுக்கு வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான வடகொரிய அதிபர் கிம்மின் இரண்டாவது சந்திப்பு தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை வடகொரியா எடுத்துள்ளதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் மோதல் உருவாகுமோ எனும் பதற்றம் எழுந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :