அமெரிக்கா விமான விபத்து

Home

shadow


அமெரிக்காவில் விமான ஓடுபாதையில் தரையிறக்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லாரெடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பைப்பர்-31 என்ற சிறு விமானம் புறப்பட்டுச் சென்றது.  ஓடுதளத்தில் இருந்து உயரே பறந்த சிறிது நேரத்தில் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விமானி உடனடியாக லாரெடோ விமான நிலையத்திற்கே விமானத்தை திருப்பினார்.  ஆனால் ஓடுபாதையில் தரையிறக்க முயற்சித்தபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்ததால், புல்வெளியில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர். உடனடியாக மீட்புக் குழுவினர் விரைந்து சென்று விமானத்தில் பற்றிய தீயை அணைத்தனர். விமான விபத்து காரணமாக லாரெடோ விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிசாரணை நடைபெற்று வருகிறது

இது தொடர்பான செய்திகள் :