அமெரிக்கா அமைதி நடவடிக்கையில் மத்தியஸ்தம் செய்யும் தகுதியை இழந்து விட்டது

Home

shadow

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு இடையிலான மோதல்களை தடுத்து நிறுத்தி நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் அமைதி திட்டம் ஒன்றை உருவாக்கி வருகின்றன. அவ்வகையில், அமெரிக்கா ஒரு அமைதித் திட்டத்தைத் தயாரித்துவருவதாகக் கூறப்படுகிறது. இதேபோல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரானும் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக பல்வேறு தலைவர்களை சந்தித்து அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோரை சமீபத்தில் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மேக்ரானை பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் பாரிசில் சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பாஸ், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையில் அமைதியை உருவாக்குவதற்காகப் பாடுபட்டு வருவதாக இம்மானுவேல் மெக்ரானை பாராட்டினார். அதேசமயம், நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளும் அமெரிக்கா அமைதி நடவடிக்கையில் மத்தியஸ்தம் செய்யும் தகுதியை இழந்து விட்டது என மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டார். அமெரிக்கா தயாரிக்கும் அமைதி திட்டத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்க மாட்டார்கள் எனவும் அப்பாஸ் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :