அமெரிக்கா புதிய வரி 17 நாடுகள் அதிருப்தி

Home

shadow

  

அமெரிக்க அதிபர் அண்மையில் அறிவித்துள்ள புதிய வரி உயர்வால் இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் அமெரிக்காவின் முடிவுக்கு தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளன.

மீண்டும் அமெரிக்காவை பெரியதாக மாற்றுவோம் என்ற வாக்குறுதியுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அண்மையில் உயர்த்தினார். அதில்,இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 விழுக்காடும், அலுமினியம் மீது 10 விழுக்காடும் வரியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியையும் உயர்த்தப்போவதாக கூறியுள்ளார். ஆண்டுதோறும் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான இரும்பு மற்றும் அலுமினியம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த வரி உயர்வால் இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், இந்தியா உள்பட 17 நாடுகள் டிரம்ப் முடிவுக்கு தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளன. வரி உயர்வு காரணத்தால் அமெரிக்காவில் செயல்படும் நிறுவனங்கள் உள்நாட்டிலேயே இரும்பு கொள்முதல் செய்யும் பட்சத்தில், உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கணிப்பாகும்.

இது தொடர்பான செய்திகள் :