அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடைகளை ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம் - இந்தியாவிற்கு சீனா அழைப்பு

Home

shadow

                 அமெரிக்கா விதிக்கும் பொருளாதார தடைகளை ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம் என இந்தியாவிற்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட்  ட்ரம்ப்  மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது.சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ட்ரம்ப் 200 பில்லியன் அமெரிக்க டாலரை வரியாக விதித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் சுமார் 60 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரியை விதித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து S-400 ரக ஏவுகணைகளை  வாங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்தியா  கையெழுத்திட்டுள்ளது.இதனால் இந்தியா மீது அமெரிக்கா  பொருளாதார தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சீனா விடுத்திருக்கும் அழைப்பானது இந்திய - சீன உறவில் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.இதுகுறித்து சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் அளித்துள்ள பேட்டியில், தற்போது காணப்படும் வர்த்தக நெருக்கடிகளை எதிர்கொள்ள சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் எனவும் இரு நாடுகளும் பெரும் பொருளாதார சக்தியை கொண்டிருக்கின்றன எனவும் கூறினார். 


அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக நடவடிக்கையும் சீனாவை பாதிக்காது. 


ஆனால், இந்தியாவுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :