நேட்டோ நாடுகளுக்கு இடையே பிரச்னையை உருவாக்க
ரஷ்யா அதிபர் புதின் முயற்சி செய்வதாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக்
பாம்பியோ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு
சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஹங்கேரி வெளியுறவு துறை
அமைச்சர் பீட்டரை அந்நாட்டின் தலைநகர் புதாபெஸ்ட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வாதிகார தன்மை கொண்ட
ரஷ்யாவால், சிறிய நாடுகளின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு சிறந்த நண்பனாக இருக்க
முடியாது எனவும், ஹங்கேரி மக்கள் தங்கள் வரலாற்றில் இருந்தே இதனை நன்கு
அறிவர் என்றும் தெரிவித்தார். நேட்டோ நாடுகள் இடையே பிரச்னையை உருவாக்க ரஷ்ய அதிபர்
புதின் முயற்சி செய்வதற்கு அனுமதிக்க கூடாது என தெரிவித்த அவர், சீனாவுடனான நட்பு அரசியல்
மற்றும் பொருளாதார ரீதியாக மிக பெரிய பாதிப்பை சில நேரங்களில் ஏற்படுத்தும்
என்றும் கூறினார்