அமெரிக்கா - ஜேம்ஸ் கோமே

Home

shadow


அமெரிக்க அதிபராக இருப்பதற்கான தார்மீக தகுதி டிரம்ப்பிற்கு இல்லை என எஃ ப்.பி.. முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமே விமர்சித்துள்ளார்.

2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற போது எஃ ப்.பி.-யின் தலைவராக ஜேம்ஸ் கோமே பதவி வகித்து வந்தார். தேர்தல் நேரத்தில் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் ஈமெயில் முறைகேடு தொடர்பான வழக்கை இவர் விசாரித்து வந்தது ஹிலாரிக்கு தேர்தலில் மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விசாரணையை ஜேம்ஸ் சரியாக மேற்கொள்ளவில்லை எனக் கூறி அதிபர் டிரம்ப் அவரை எஃ ப்.பி. தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினார். இதனால் ஜேம்ஸ் மற்றும் அதிபர் டிரம்ப் இடையே மோதல் வெடித்தது. இருவரும் பல்வேறு சமயங்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்தும், குற்றம் சாட்டியும் வந்தனர். இந்த நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜேம்ஸ் கோமே அளித்த பேட்டியில், அமெரிக்காவின் அதிபராக இருப்பதற்கான தார்மீக தகுதி டிரம்ப்பிற்கு இல்லை என தெரிவித்துள்ளார். டிரம்ப் வயது முதிர்வின் காரணமாக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிய ஜேம்ஸ், அதிபர் டிரம்ப் நாட்டிற்கு உண்மையாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார்மேலும் அவர் , டிரம்ப்பை மிரட்டும் வகையில் ரஷ்யா ஏதேனும் ஆவணங்களை தங்கள் வசம் வைத்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஜேம்ஸின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :