அமெரிக்கா - மகாத்மா காந்தி புகைப்படம்

Home

shadow

  

மறைந்த தேசத் தந்தை மகாத்மா காந்தியின் கையெழுத்திடப்பட்ட அவரது புகைப்படம் அமெரிக்காவில் 27 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஏல நிறுவனம் ஒன்று மகாத்மா காந்தியின் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் ஏலம் விட்டது. 1963 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டின்போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் காந்தியுடன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மதன் மோகன் மாளவியா இடம் பெற்றிருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில் எம்.கே காந்தி என காந்தி தன் இடது கையால் கையெழுத்திட்டிருந்தார். இந்த புகைப்படத்தை 27 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் ஒருவர் எடுத்துள்ளார். ஏலம் எடுத்தவரின் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பான செய்திகள் :