அமெரிக்காவில் டிரம்ப் கிம் ஜோங் உன் சந்திப்பு

Home

shadow


அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் வரும் மே மாதம் சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வடகொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனை காரணமாக வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே மோதல் நிலவி வருகிறது.  இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் காரணமாக மூன்றாம் உலகப் போர் மூளும் என்ற அச்சம் நிலவியது . இந்த நிலையில், தற்போது அமெரிக்கா அதிபர் டிரம்ப்பை சந்திக்க வடகொரியா அதிபர் கிம் விருப்பம் தெரிவித்துள்ளார். வடகொரிய அதிபரின் அழைப்பை டிரம்ப் ஏற்றுக் கொண்டதாகவும், விரைவில் சந்திப்பு நடைபெறும் எனவும்  வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப்பும் தனது சுட்டுரையில் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :