அமெரிக்காவில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

Home

shadow

  

        அமெரிக்காவில் வாகனங்கள் மோதி நேரிட்ட விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து டிஸ்னி வேர்ல்டுபகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா அழைத்துச் சென்றனர். அந்த வேன் கென்ஸ் வில்லே என்ற இடத்தில் சென்றபோது அதிவேகமாக வந்த இரண்டு லாரிகள் பயங்கரமாக மோதிக் கொண்டன. மோதிய வேகத்தில் அவை குழந்தைகள் சென்ற வேனில் மோதின. இதனால் நொறுங்கிய வேன் சாலையில் கவிழ்ந்தது. அதன்மீது மேலும் 2 வாகனங்கள் மோதின. இதனால் வேன் தீப்பிடித்து எரிந்தது. அதில் வேனில் இருந்த 5 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே வேன் மீது மோதிய லாரிகளின் ஓட்டுநர்கள்  இருவரும் உயிரிழந்தனர்

இது தொடர்பான செய்திகள் :