அமெரிக்காவில் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் நாடாளுமன்ற குழுவின் தீர்மானம் - தடுத்து நிறுத்திய அதிபர் டிரம்ப்

Home

shadow

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்பால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு நாடாளுமன்றம் கொண்டு வந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம் அதிபர் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தென் எல்லையான அமெரிக்காமெக்சிகோ இடையே, சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், எல்லைச் சுவர் கட்ட தீர்மானித்த அதிபர் டிரம்ப், அதற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்நிலையில் எல்லைச் சுவர் பணிக்காக அதிபர் டிரம்ப் கேட்ட 35 ஆயிரம் கோடி ரூபாயை அளிக்க அமெரிக்க நாடாளுமன்றம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அமெரிக்க அரசை பகுதியாக முடக்கிய அதிபர் டிரம்ப், அந்நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனை அடுத்து அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் கொண்டு வந்தது. தற்போது இந்த தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம் அதிபர் டிரம்ப் தடுத்து நிறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிபர் என்ற முறையில் அமெரிக்காவை பாதுகாப்பதே தனது உச்சகட்ட கடமை எனவும், அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டு வந்த தீர்மானம் சட்டமாக நிறைவேற்றப்பட்டிருந்தால், பல்லாயிரகணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளதாக தெரிவித்த அவர், வீட்டோ அதிகாரம் மூலம் அதனை தடுக்கும் கடமை தனக்கு இருப்பதாகவும், அதனை நினைத்து பெருமைப் படுவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :