அமெரிக்காவை தாக்கும் ஃபுளோரன்ஸ் புயல்

Home

shadow


      அமெரிக்காவை 48 மணி நேரத்தில் அதிசக்தி வாய்ந்த புயல் தாக்கும் என்றும் அதன் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அங்கு அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு மற்றும் வடக்கு பகுதியை தாக்குவது உண்டு. அதேபோல் தற்போதும் அட்லாண்டிக் கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகி அமெரிக்காவின் கிழக்குப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. ஃபுளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாகாணங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலின் தாக்குதல் பாதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த 3 மாகணங்களிலும் உள்ள கடலோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 17 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சிறைகளில் உள்ள கைதிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். அனைத்து இடங்களிலும் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :