அமெரிக்காவைத் தொடர்ந்து கவுதமலா நாடும் தனது தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேத்திற்கு மாற்றுவதாக அறிவிப்பு

Home

shadow

அமெரிக்காவின் இந்த முடிவிற்கு எதிரான ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் வாக்களித்தன. ஹோண்டுராஸ், கவுதமலா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்த நிலையில் 35 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. ஐ.நா.வில் தனிமைப்படுத்தப்பட்ட இந்த நாளை மறக்கப்போவதில்லை என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது. இந்த நிலையில், அமெரிக்காவை பின்பற்றி தூதரகத்தை ஜெருசலேம் மாற்றும் முடிவை எடுத்துள்ளதாக கவுதமலா அதிபர் ஜிம்மி மொராலஸ் அறிவித்துள்ளார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் கலந்து பேசி விட்டதாகவும், தூதரக மாற்றப் பணிகளை தொடங்குமாறு வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :