அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ்

Home

shadow

 

அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவு வலுவாக உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் கூறியுள்ளார்.


பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜேம்ஸ் மேட்டீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியாவுடன் சுமுக உறவில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருப்பதாகவும்இரு நாட்டுகள் புரிந்துகொள்ளுதலின்படியான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார், குறிப்பாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கு இடையேயான தடைகள் அனைத்தும் விலக்கப்பட்டு பாதுகாப்புதுறை ரீதியிலான உறவில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும், ஆப்கான் அமைதி விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஐ.நா சபை, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

 

இது தொடர்பான செய்திகள் :