அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் குற்றசாட்டு

Home

shadow

        அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் அளித்த பேட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகள் என்றும் இந்த இருநாடுகளும் போர் குறித்தோ அல்லது மறைமுக போர் குறித்தோ சிந்தித்து பார்க்கக் கூடாது என தெரிவித்தார். பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைதி பேச்சு ஒன்றுதான் சிறந்த வழி என்றும் அணுசக்தி திறன் கொண்ட இருநாடுகளும் போரிடுவது, சம்பந்தப்பட்ட இருநாடுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.  இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் தனது விருப்பமாகும் எனவும். ஆனால் தனது முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது என குற்றாசாட்டியுள்ளார். காஷ்மீர் மக்களின் உரிமைகளை இந்தியாவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது என கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றதும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக கடிதம் எழுதினார். இதை இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

இது தொடர்பான செய்திகள் :