அருணாச்சலப்பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு

Home

shadow

             சர்ச்சைக்குரிய தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த எல்லைப் பகுதியான அருணாச்சலப்பிரதேசத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றதற்கு சீனா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒண்றான அருணாச்சலப்பிரதேசத்தை தங்கள் நாட்டின் ஆளுமைக்கு உட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதி எல்லையாக சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அருணாச்சலபிரதேசத்துக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், சீனாவின் எல்லையில் உள்ள இப்பகுதி தொடர்பான விவகாரத்தில் தங்களது நிலைப்பாடு உறுதியாகவும், மிகத்தெளிவாகவும் இருப்பதாகவும், இந்திய-சீன எல்லைப் பகுதியில் தங்கள் நாட்டின் கிழக்கு எல்லையில் உள்ள இந்த இடத்துக்கு இந்திய தலைவர்கள் வரும்போதெல்லாம் தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற செயல்களில் இருந்து இந்திய தலைவர்கள் விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :