அர்ஜென்டினா - மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை அரசாங்கம் குறைத்ததை கண்டித்து மக்கள் காலி சக்கர நாற்காலிகளுடன் போராட்டம்

Home

shadow

 

அர்ஜென்டினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகளை அந்நாட்டு அரசாங்கம் குறைத்ததை கண்டித்து, ஏராளமான மக்கள் காலி சக்கர நாற்காலிகளுடன் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அர்ஜென்டினா நாட்டின் சுகாதாரப் பராமரிப்புத் துறை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பட்ஜெட்டில் அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச சிகிச்சை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு வழங்கும் அரசு உதவி தொகையையும் சரியான நேரத்தில் வழங்குவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் தலைநகர் பியூனோஸ் ஏர்ஸில் காலி சக்கர நாற்காலிகளை தள்ளிக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, காற்றடைக்கப்பட்ட மிகப்பெரிய சக்கர நாற்காலியினை போராட்டக்காரர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். வசதியில்லாத மாற்றுத்திறனாளிகள்தான் இந்த பட்ஜெட் குறைப்பினால் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்ற பின்னரும், அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்ற சலுகைகளை குறைப்பதால் சுகாதார பராமரிப்பு துறையில் அரசின் முதலீடு 91 சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :