அர்ஜென்டினாவில் ஐஎம்எஃப் மற்றும் அதிபர் மாக்ரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Home

shadow

            அர்ஜென்டினாவில் அதிபர் மௌரிசியோ மாக்ரியின் பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும், ஐஎம்ப் கடன் ஒப்பந்தத்துக்கு எதிராகவும், தலைநகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

       அர்ஜென்டினாவில் அதிபர் மாக்ரி தலைமையிலான அரசு, புதிய பொருளாதார கொள்கையின்படி ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளதால், இது நாட்டின் கடன் சுமையை மேலும் அதிகரிப்பதுடன், நாட்டு மக்களையும் துயரத்தில் ஆழ்த்தும் என எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஐஎம்எஃப் மற்றும் அதிபர் மாக்ரிக்கு எதிராக தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அர்ஜென்டினா சுதந்திர தினத்தின்போது இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

இது தொடர்பான செய்திகள் :