அல்கொய்தா அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புடன் இருப்பதாக ஐ.நா அறிக்கை

Home

shadow

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புடன் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை தயாரித்து வெளியிட்டுள்ளது. ஒசாமா பின்லேடன் மரணத்துக்குப் பிறகு அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் அமைதியாக இருப்பது போல் காட்சி அளித்தாலும் அது, பாகிஸ்தானில் செயல்படும்  லஷ்கர் - - தொய்பா, ஹக்கானி போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅதன் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புடன் இருக்கின்றனர் என்றும், அல்கொய்தா இயக்கத்தின் இப்போதைய தலைவரான அய்மான் -அல் -ஜவாஹிரியின் உடல்நலம் குறித்தும், இருப்பிடம் பற்றியும் எந்த தகவலும் இல்லை என்றும் .நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.  .எஸ். இயக்கம் சிரியாவிலும் ஈராக்கிலும் அதிகாரத்தை இழந்து வரும் நிலையில் பழி வாங்கும் நடவடிக்கைகளுக்காக சிலீப்பர் செல்களை ஏற்படுத்தி வருகிறது என்றும் ஆப்கானில் தாலிபன்களுடன் நெருக்கமாகச் செயல்படும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :