ஆப்கனிஸ்தான் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ்

Home

shadow


      ஆப்கனிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷிட்டே பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்துல் அலி மசாரி என்னும் அரசியல் தலைவரின் 23-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதற்காக ஒரு பொதுகூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் காவலர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :