ஆப்கன்: காபுல் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர்.

Home

shadow

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் நகரில் உள்ள ‘ஆப்கன் வாய்ஸ்’ என்ற இடத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.  சிறிது நேரத்தில் புலே சோக்ஹிடியா பகுதியில் உள்ள தெப்யானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்குள்ள கலாச்சார மையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர் என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  இந்நிலையில், காபுலில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ எஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இதுதொடர்பாக, ஐ.எஸ். அமைப்பின் இணையதள பக்கத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுலில் எங்கள் இயக்கத்தை சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பான செய்திகள் :