ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் பலி

Home

shadow

            ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 காவல்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் பலி

            ஐஎஸ் தீவிரவாதம் அமைப்பு பொறுப்பேற்பு

 

            ஆப்கானிஸ்தானில் ஜாலாபாத் நகரில் நேற்று தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

 

             ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஜாலாபாத் நகரில், காவல்துறையின் வாகனச் சோதனை சாவடியில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

 

           வெடிகுண்டுகள் நிரப்பபட்ட காரில் வந்த தற்கொலை படையினர் சோதனை சாவடி மீது வெடிக்க செய்ததில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் காவல்துறையினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

           இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :