ஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி

Home

shadow

              ஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால்  17 போலீசார் பலி

              ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் யுத்தம் நிகழ்ந்து வரும் பகுதியில் நடத்தப்பட்ட  தவறான வான்வழித் தாக்குதலால்  17 போலீசார் பலியான பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

             ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே தொடந்து பல்வேறு பகுதிகளில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கன் பாதுகாப்பு படைகள் கடுமையாக சண்டையிட்டது. இதில் வெளிநாட்டு படைகள் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் 17 போலீசார் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.

            மேலும், 14 பேர் இத்தாக்குதலில் காயமடைந்தனர் என ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள அமெரிக்க படைகள் இந்த தவறான தாக்குதலை நடத்தியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :