ஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்

Home

shadow

                      ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் உயிரிழந்தனர்.


ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.  இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுல் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்தது. இதில் தாலிபான் பயங்கரவாதி ஒருவர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 63 மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . கடந்த 10 நாட்களில்  அந்நாட்டில் நடைபெற்ற இரண்டாவது பெரிய தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

இது தொடர்பான செய்திகள் :