ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் மீட்கப்பட்டனர்

Home

shadow

 

ஆப்பிரிக்காவின் கேமரூன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பிரிவினைவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள் 78 மாணவர்கள், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன ஓட்டுனர் ஒருவர் ஆகியோரை கடத்தி சென்றனர். மாணவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு இருந்தது. இந்நிலையில், கடத்தப்பட்ட மாணவர்கள் 78 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஓட்டுனரும் விடுவிக்கப்பட்டார். ஆனால் கடத்தப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை விடுதலை செய்யாமல் இன்னும் பயங்கரவாதிகள் தங்கள் பிடியிலேயே வைத்துள்ளனர். பிரிவினைவாதிகள் தான் மாணவர்களை கட்த்தியதாக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :