ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா உட்பட 10 நாடுகளின் தூதரகத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையிலான பொருள் கண்டெடுப்பு

Home

shadow

              ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியா உட்பட 10 நாடுகளின் தூதரகத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையிலான பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள அர்ஜெண்டினா தூதரகத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் சந்தேகத்திற்கு இடமான வகையில் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர், புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் செயிண்ட் கில்டா சாலை பகுதியில் அமைந்துள்ள இந்தியா, அமெரிக்கா தூதரகம் உட்பட 10 நாடுகளின் தூதரகங்களில் இருந்து சந்தேகத்திற்கு இடமான வகையிலான பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, பாகிஸ்தான், கொரியா, ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து, கிரீக், மற்றும் இந்தோனேசியா நாடுகளின் தூதரகத்தில் இருந்தும் சந்தேகத்திற்கு இடமான வகையிலான பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய காவல் துறையினர், அவசர உதவி குழுவினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் அப்குதியில் குவிக்கப்பட்டு, அந்த பொருள் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பான செய்திகள் :