இங்கிலாந்தின் பிரெக்சிட் விவகாரங்கள் துறை அமைச்சர் ராஜினாமா

Home

shadow

இங்கிலாந்தின் பிரெக்சிட் விவகாரங்கள் துறை அமைச்சர் டேவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து நாடு வெளியேற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இது தொடர்பான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பிரெக்சிட் விவகாரத்தில் தன் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தனக்கு ஆதரவாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரெக்சிட் விவகாரங்கள் துறை அமைச்சர் டேவிஸ் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மேக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், பிரெக்சிட் நடவடிக்கைக்கு பின்னரும் ஐரோப்பிய நாடுகளுடன்  நெருக்கமான வர்த்தக உறவை மேற்கொள்ள வேண்டும் என  நினைப்பது இங்கிலாந்தை மிகவும் பலவீனமடைய செய்யும்  என தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையால் இங்கிலாந்தின் பொருளாதாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கும் எனவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்து தெரசா மே எழுதியுள்ள கடிதத்தில், இங்கிலாந்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தனது பேச்சுவார்த்தை அமையும் என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 2 ஆண்டுகளாக டேவிஸ் ஆற்றிய பணிகளுக்கும் மே தனது கடிதத்தில் நன்றி தெரிவித்துள்ளார். டேவிஸின் ராஜினாமாவை பிரதமர் மே ஏற்றுக் கொண்டதாகவும், அவருக்கு பதிலாக புதிய அமைச்சர் இன்று நியமனம் செய்யப்படுவார் எனவும்  பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :