இங்கிலாந்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது ரசாயன தாக்குதல்

Home

shadow

 

      இங்கிலாந்தில் முன்னாள் ரஷ்ய உளவாளி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரஷ்யர்கள் இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என தொலைக்காட்ச்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளனர்.


        முன்னாள் ரஷ்ய உளவாளியான ஸ்கிரிப்பால் மற்றும் அவரது மகள் யூலியா மீது கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்தில் உள்ள சால்ஸ்புரி நகரில் வைத்து ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது


      இந்த தாக்குதலின் பின்னனியில் ரஷ்யா இருப்பதாக இங்கிலாந்து அரசு குற்றம் சாட்டி வந்தது. ஆனால் ரஷ்யா இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது


     இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த இங்கிலாந்து காவல் துறை தாக்கல் செய்த அறிக்கையில், ரஷ்யாவை சேர்ந்த இருவர் மீது ரசாயன தாக்குதலை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது


     அலெக்சாண்டர் மற்றும் ருஸ்லன் எனும் இருவர் தாக்குதல் நடந்த அதே நேரத்தில் சால்ஸ்புரி நகரில் இருந்துள்ளனர்


     இவர்கள் இருவரும் ரஷ்ய உளவாளிகள் என குற்றம் சாட்டியுள்ள இங்கிலாந்து காவல் துறை, இவர்கள் இருவரும் தான் தாக்குதல் நடத்தியதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.


     இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அலெக்சாண்டர் மற்றும் ருஸ்லன், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் ஜோடிக்கப்பட்டவை என்றும், விடுமுறைக்காகவே தாங்கள் இங்கிலாந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.


     மார்ச் 3-ஆம் தேதியே தாங்கள் சால்ஸ்புரி நகருக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் மோசமான வானிலை காரணமாக அடுத்த நாள் தான் தங்களால் செல்ல முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்


    மேலும், தங்களிடம் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொருட்கள் இருந்திருந்தால், விமான நிலைய சோதனையிலேயே தெரிய வந்திருக்கும் என தெரிவித்த அவர்கள், இங்கிலாந்தின் குற்றச்சாட்டால் தங்களின் வாழ்வே மாறிவிட்டதாகவும், வெளியில் செல்ல கூட அச்சமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :