இங்கிலாந்து நாட்டில் ரசாயன தாக்குதலுக்கு ஆளாகி பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Home

shadow

இங்கிலாந்து நாட்டில் ரசாயன தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்  உயிரிழந்ததாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தின் சால்ஸ்புரி நகரில் முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீது ரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக இங்கிலாந்து நாடு குற்றம் சாட்டியுள்ள நிலையில், ரசாயன ஆயுதங்களின் தடைக்கான சர்வதேச அமைப்பு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம், சால்ஸ்புரி நகருக்கு அருகே உள்ள அமெஸ்புரி நகரில் வயதான தம்பதியர் இருவர் சுயநினைவின்றி ஆபத்தான நிலையில் வீடு ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில், முன்னாள் ரஷ்ய உளவாளி  மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட நோவிசோக் எனும் ரசாயனத்தால், தம்பதிகள் இருவரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்த்து. மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தம்பதியரில் ஒருவரான டான் ஸ்டர்ஜஸ் எனும் பெண்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ரஷ்ய உளவாளி மீதான தாக்குதலுக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்துள்ள காவல் துறையினர், கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான செய்திகள் :