இந்தச் சந்திப்பு சமாதானத்துக்கு வழிவகுக்கும்

Home

shadow

 

மிகப்பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்திய அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான சந்திப்பு நிறைவடைந்தது. அணு ஆயுதங்களை முற்றிலும் கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

அமெரிக்க மற்றும் வடகொரிய அதிபர்கள்  சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஹோட்டலில் இன்று காலை சந்தித்தனர். டிரம்ப்பும்கிம்மும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். இதனை தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. சுமார் 48 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப்  பேச்சுவார்த்தையில் அணு ஆயுத விவகாரம்வடகொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. முதல் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர்இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கையசைத்தனர். பேச்சுவார்த்தை குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்அணுஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் எனத் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கு இடையேயான சமாதானத்திற்கு வழிவகுக்கும் என தான் நம்புவதாக வடகொரிய  அதிபர் கிம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இரு நாட்டு அதிபர்களின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. இதில்இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய உதவியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர். மதிய உணவிற்கு பின்னர் தலைவர்கள் தனியாக நடந்து சென்று சிறிது நேரம் பேசினர். இரண்டம் கட்ட  பேச்சுவார்த்தை முடிவடைந்ததை அடுத்து இரு நாடுகளுக்கு இடையேயான முக்கிய ஒப்பந்தத்தில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள விஷயங்கள்  குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வடகொரிய அதிபர் கிம்கடந்த காலங்களில் நடந்தவற்றை மறக்க இருதரப்பும் முடிவு செய்துள்ளதாகவும்உலகம் புதிய மாற்றத்தை பார்க்கும் எனவும் தெரிவித்தார். சந்திப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப்எதிர்பார்த்ததைவிட பேச்சுவார்த்தை சிறப்பாக அமைந்ததாகவும்வடகொரியா அதிபர் அமெரிக்காவுக்கு வர அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வடகொரியா அதிபரை மீண்டும் சந்தித்துப் பேச இருப்பதாகவும் டிரம்ப் கூறினார். சந்திப்பின் போது அணு ஆயுதங்களை முற்றிலும் கைவிட வடகொரியா ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான செய்திகள் :