இந்திய தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது - பாகிஸ்தான் அரசு

Home

shadow

             இந்திய தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தவறாக புரிந்த் கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.


இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்திருந்தார். இம்ரான் கானின் இந்த கருத்து இந்தியாவில் பல்வேறு கேள்விகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்திய தேர்தல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்து தவறாக புரிந்த் கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது. இது குறித்து பேசிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷி, இந்திய ஊடகங்கள் அனைத்து விஷயங்களையும் பதற்றத்துக்குரியவையாக மாற்றி விடுகின்றன என்றும், பிரதமரின் கருத்தானது, அவர் சொன்னதைத் தாண்டி வேறொரு முறையில் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், மோடி குறித்து பிரதமர் இம்ரானுக்கு என்ன கருத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என தெரிவித்த அவர், இந்தியத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை அந்நாட்டு மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள் என்றும் கூறினார்.

இது தொடர்பான செய்திகள் :