இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

Home

shadow

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 114 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 144 பேரை, அந்நாட்டு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்தது. இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 144 இந்திய மீனவர்கள் நேற்று மாலை தாயகம் திரும்பினர். பாகிஸ்தான் சிறையில் எஞ்சியுள்ள 147 இந்திய மீனவர்கள் ஜனவரி 8ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :