இந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Home

shadow

          இந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

 

         சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் தீவிரவாதத்தை எதிர்த்து பதிலடி கொடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

        கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று துவங்கியது.

 

          இந்த மாநாட்டின் இடையே பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜின்பெக்கோவ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

 

         அதன் பின்னர் ஷாங்காய் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி,

 

        இந்தியா தீவிரவாதம் இல்லாத சமூகமாக இருக்க விரும்புகிறது. தீவிரவாதத்திற்கு உதவி செய்பவர்கள், தீவிரவாத்தை பரப்புவோர்கள் அனைவரும் தீவிரவாத செயல்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள், அவர்களே முழு பொறுப்பேற்க வேண்டுமென கூறினார்.

 

          தீவிரவாதத்தை எதிர்த்து போராட ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டை சர்வதேச அளவில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் நடத்த வேண்டுமெனவும் மோடி உரையாற்றினார்.

இது தொடர்பான செய்திகள் :