இந்தியாவின் கண்டனத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலியை அந்நாடு திரும்ப அழைத்துள்ளது. 

Home

shadow

மும்பையில் 164 பேரைக் கொன்ற குண்டுவெடிப்பு சதியில் குற்றம்சாட்டப்பட்டவரும், .நா. சபையால் தடை செய்யப்பட்ட ஜமாத் உத்தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சையீத், பாகிஸ்தான் சிறையில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாகிஸ்தானுக்கான பாலஸ்தீன தூதர் வாலித் அபு அலியும் பங்கேற்றார். பாலஸ்தீனத்துக்கு நட்பு நாடாக இந்தியா திகழ்ந்து வரும் நிலையில், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதி ஹபீஸ் சையீத் நிகழ்ச்சியில் பாலஸ்தீன தூதர் பங்கேற்றார். இது குறித்து பாலஸ்தீன அரசுக்குத் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவித்தது. இதனையடுத்து, பாகிஸ்தானுக்கான தூதர் வாலித் அபு அலியை, பாலஸ்தீனம் திரும்ப அழைத்துக்கொண்டது. இத்தகவலை, இந்தியாவுக்கான பாலஸ்தீனத் தூதர் அட்னான் அபு அலி ஹாஜியா, டெல்லியில் தெரிவித்தார்.

      இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான், பாலஸ்தீனிய தூதர் பாகிஸ்தானில் நடைபெறும் பல கூட்டங்களில் கலந்துகொள்வதாகவும், நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பாலஸ்தீனியத்திற்காகவே அவர் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :