இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 5.9 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா, அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் அடிக்கடி லோசன நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மொலுகாஸ் பகுதியில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கியதால் அச்சம் அடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.