இந்தோனேசியாவில் தொடர் பயங்கரவாத தாக்குதல்

Home

shadow

 

இந்தோனேசியாவில் நடைபெற்ற தொடர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அந்நாட்டில்  தீவிரவாத தடுப்பு படையினர் தீவிர சோதனை நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்த  முயன்ற பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்தோனேசியா நாட்டில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பின்னடைவை சந்தித்து வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அடுத்த கட்டமாக தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளனர். தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இந்தோனேசியா நாடு முழுவதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை சிறப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். டென்சாஸ் 88 எனும் சிறப்புப் படையினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சுமத்ரா பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகம் மீது தாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் 4 பேரை போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்தத் தாக்குதலில் போலீசார் ஒருவரும் உயிரிழந்தார். இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய கேள்விக்குறியை உருவாக்கி உள்ளது.

இது தொடர்பான செய்திகள் :