இந்தோனேசியாவில் வாக்கு எண்ணிக்கையின்போது 272 பேர் உயிரிழப்பு

Home

shadow

          இந்தோனேசியாவில் வாக்கு எண்ணிக்கையின்போது  272 பேர் உயிரிழப்பு

         இந்தோனேசியாவில் வாக்கு எண்ணிக்கையின்போது  272 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்தள்ளது.  

         இந்தோனேசியாவில், ஏப்ரல் 17 அன்று நடந்த வாக்குப்பதிவின் போது, கண்காணிப்பு மற்றும் வாக்குகளை என்னும் பணியில், சுமார் 70 லட்சம் பேர் பணியாற்றினர். பொருட்செலவைக் குறைக்க, இந்தோனேசிய அரசு,  அதிபர் தேர்தல், தேசிய நாடாளுமன்றம், பிராந்திய நாடாளுமன்றங்கள் ஆகியவற்றுக்கு, ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தியது. இந்த தேர்தலில், சுமார் 80% வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை எண்ணும் பணி ஒரே சமயத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக முழுநேரப் பணியாளர்களுடன் தற்காலிகப் பணியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். 

           தற்காலிகத்  தேர்தல் பணியாளர்கள், மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமல், பணியமர்த்தப்பட்டனர். பணி பளு காரணமாக தேர்தல் பணியாளர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், தற்காலிகப் பணியாளர்கள் அதிகம் உயிரிழந்துள்ளனர். மேலும். பலர் உடல் நலக்  குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இரவு நேரங்களிலும், கடுமையாக வேலை செய்ததால், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது . 

          உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, 36 மில்லியன் ருபியா இழப்பீடு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இது தொடர்பான செய்திகள் :