இமயமலையில் 32 அங்குல கால்தடம்... புகைப்படம் வெளியிட்ட இந்திய ராணுவம் ...

Home

shadow

இந்திய ராணுவம் இமயமலையில் பனிமனிதனின் கால்தடம் பதிந்துள்ளதாக புகைப்படம்  ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. மக்கலு ராணுவ முகாம் பகுதியில் 32 அங்குலம் கொண்ட அந்த கால்தடம் ஒற்றை கால்தடம் மட்டுமே இருந்நதாகவும் அந்த பதிவில் இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

எட்டி என்ற பனிமனிதன் வாழ்ந்து வருவதாக உலகம் முழுவதும் நம்பப்படுகிறது. பனிமனிதனான எட்டி பற்றி பல திரைப்படங்கள், ஆவணப்படங்கள், வீடியோ கேம்ஸ் போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளன. இப்பதிவை, இந்திய ராணுவம் சமூகவளைதளங்களில்  பதிவிட்டதும் பொது மக்கள் இதனை பற்றி ட்விட்டரில் எட்டி பற்றி விவாதிக்க தொடங்கினர். எட்டி என்ற தலைப்பு ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இது தொடர்பான செய்திகள் :