இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது

Home

shadow

        இலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது

 
        இலங்கையில் தேவாலயம், ஹோட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழுப்புவில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் தேவாலயம் மற்றும் ஓட்டல்களில் தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதலில் சிக்கி 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்தனர்.

இந்த பயங்கரவாதத்திற்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கு தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பாக நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :