இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது

Home

shadow

        இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது

 

        இலங்கையில் தேவாலயம், ஹோட்டல்களில் தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமானவர்கள் 5 பேரை துபாயில் இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

       இலங்கை தலைநகர் கொழுப்புவில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் தேவாலயம் மற்றும் ஓட்டல்களில் தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதலில் சிக்கி 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்தனர்.

 

       இந்த பயங்கரவாதத்திற்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கு தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

       இந்த வழக்கில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த முஹம்மது மில்ஹான் உள்பட சந்தேகத்திற்குரிய சிலரை குற்றவாளிகளாக அறிவித்தது.

       இந்த நிலையில், முஹம்மது மில்ஹான் உள்பட தேடப்படும் 5 குற்றவாளிகளை, இலங்கை காவல்துறையினர் துபாயில் கைது செய்து, இன்று காலை கொழும்புவுக்கு அழைத்து வந்ததாக இலங்கை காவல்துறை செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :