இலங்கை பிரதமர் - பிபின் ராவத் சந்திப்பு

Home

shadow


இலங்கை சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினார்.

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் நான்கு நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார். அங்கு அவருக்கு அரசு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணத்தின் முதல் நாளான நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, பிபின் ராவத் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு பாதுகாப்பு குறித்து இருவரும் விவாதித்தனர். அதைதொடர்ந்து இலங்கை ராணுவ தளபதி மகேஷ் செனநாயகே, கடற்படை தளபதி எஸ்.எஸ்.ரணசிங்கே மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபிலா வைத்யரத்னே ஆகியோரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையின் கண்டி பகுதியில் இந்திய ராணுவத்தின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு ஆய்வு கூடத்தை பிபின் ராவத் இன்று தொடங்கி வைக்க உள்ளார். 

இது தொடர்பான செய்திகள் :