இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு

Home

shadow

               இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
               
               இலங்கையில்  தற்கொலைப்படைத் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் அந்த நாடே அமைதி இழந்து காணப்படுகிறது. கடந்த ஞாயிறு அன்று இலங்கையில்  8 இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நிகழ்த்தினர். இதில், 359 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் . இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 60 பேரை கைது செய்துள்ள இலங்கை போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இந்நிலையில், இலங்கை பூகொடவில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும்,  பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேலும்  போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பான செய்திகள் :