இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையில் இணக்கமான உறவு நிலவிட வேண்டும்

Home

shadow

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையில் இணக்கமான உறவு நிலவிட வேண்டும் எனவும், அப்போதுதான் ஜெருசலேம் நகரில் அமைதிக் காற்று வீசும் என்றும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்

போப்பாக பதவி வகித்து வருபவர்கள், கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, ஆண்டுதோறும் உலக மக்களுக்கு நற்செய்தி வழங்குவது வழக்கமான நிகழ்வாகும். அந்த வகையில் நிகழாண்டின் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி போப் பிரான்சிஸ் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் மத்தியில் சுமுகமான சூழல் ஏற்படுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என  வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இருதரப்பினரிடையே இணக்கம் ஏற்பட்டால் தான் ஜெருசலேம் நகரில் அமைதிக்காற்று திரும்பவும் வீசத் தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார். கொரிய தீபகற்பப் பகுதியில் அமைதி திரும்பிட உலக நாடுகள் இணைந்து முயற்சிக்க வேண்டும் எனவும் போப் பிரான்சிஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :