இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீன இளைஞர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

Home

shadow

                காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீன இளைஞர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

காசா எல்லை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் பாலஸ்தீன இளைஞர்கள் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாலஸ்தீன இளைஞர்கள் காசா எல்லை பகுதியில் இஸ்ரேலுக்கு எதிராக பேரணி மேற்கொண்டனர். அப்போது, இஸ்ரேல் படையினர் மாணவர்கள் மீது கண்ணீர் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மாணவர்கள் கல் வீசி தாக்க, பதிலுக்கு இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காசா எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :