இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெற்று வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்

Home

shadow

                         இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே நடைபெற்று வரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 9 பாலஸ்தீனியர்கள்  படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காசா பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக வெகு நாட்களாக  ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  காசாவில் உள்ள  இஸ்ரேலிய கடற்படைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காசா துறைமுகத்திலிருந்து 'ஃப்ரீடம் ஷிப் 18' என்ற தலைப்பில் ஒரு போராட்டம் தொடங்கப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் இஸ்ரேல் படையினர் மீது கற்களை வீசி தாக்கினர்போராட்டக்காரர்களை தடுப்பதற்காக இஸ்ரேலிய எல்லைப் படைகள்  ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர். இந்த தாக்குதலில்  9 பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பான செய்திகள் :